திங்கள், 15 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (09:51 IST)

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு.. வெற்றியை உறுதி செய்யுமா இந்தியா?

test match
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் பரபரப்பாக நடந்து வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் இருந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் 4வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால் இந்தியாவின் டெஸ்ட் தொடர் வெற்றி உறுதியாகி விடும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கடந்த போட்டிகளில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் பெரும்பாலும் வெற்றியை சந்தித்துள்ள நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் சுப்மன் கில் என பேட்ஸ்மேன்கள் சிறப்பான நிலையில் உள்ளனர். கடந்த டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி விக்கெட்டுகளை எடுத்த பும்ரா இந்த போட்டியில் இல்லை. எனினும் ரவிச்சந்திரன் அஷ்வின், சிராஜ், குல்தீப் யாதவ் உள்ளிட்ட பவுலர்கள் நிலைமையை சமாளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.’

Edit by Prasanth.K