1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Suryakumar won the ICC Player of the Year award

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்றார் சூர்யகுமார்

suryakumar
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த சர்வதேச வீரருக்கான விருதை வென்றார் சூர்யகுமார்.

கடந்த 2023 ஆம் ஆண்டிற்காக சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளது. இதில், கேப்டனாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தலைமையிலான 11 வீரர்களை ஐசிசி தேர்வு செய்தது.

இதில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கனவு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில்,  விராட் கோலி உள்ளிட்ட 6 இந்திய வீரர்கள் இடம்பிடித்து சாதனை படைத்தனர்.

இந்த நிலையில், ஐசிசியின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர் என்ற விருதை சூர்யகுமார் யாதவ் வென்றார்.

இதன் மூலம் 2022, ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டு ஆகிய இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இந்த விருதை வென்ற முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 
அடுத்த கட்டுரையில்
இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதே இலக்கு.. அமெரிக்காவுக்காக விளையாடப் போகும் உன்முக்த் சந்த்!