1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 27 ஜூலை 2023 (09:27 IST)

ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் இன்று தொடக்கம்… தொடரை வெல்லுமா ஆஸி?

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் கடைசியாக நடந்த நான்காவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது.  இந்த போட்டியில் வெல்லும் நிலையில் இருந்தது இங்கிலாந்து. ஆனால் மழைக் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டு டிரா ஆனது.

இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணி ஆஷஸ் தொடரை இழக்காமல் தக்க வைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆஸி அணி தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில் இன்று இறுதி டெஸ்ட் போட்டி  தொடங்குகிறது.

இன்று லண்டனில் தொடங்கும் போட்டியில் இங்கிலாந்து அணி வென்று தொடரை டிரா செய்ய கடுமையாக முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவது போட்டியில் விளையாடும் அதே ப்ளேயிங் லெவன் அணியோடு இங்கிலாந்து விளையாடுகிறது.