வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 20 ஜூலை 2023 (09:32 IST)

ஆஷஸ் நான்காவது டெஸ்ட்… முதல் நாளில் தடுமாறிய ஆஸி. பேட்ஸ்மேன்கள்!

ஆஷஸ் தொடரில் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸி அணி 299 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்து தடுமாறி வருகிறது.

முதலில் பேட் செய்த ஆஸி அணியில் நடுவரிசை வீரர்களான லபுஷான்(51), டிராவிஸ் ஹெட்(48), ஸ்டீவ் ஸ்மித்(41) மற்றும் மிட்செல் மார்ஷ்(51) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை நல்ல ஸ்கோருக்கு கொண்டு சென்றனர். ஆனால் யாராலும் பெரிய ஸ்கோர் சேர்க்க முடியாமல் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

இதனால் முதல் நாள் ஆட்டமுடிவில் 8 விக்கெட்களை இழந்து 299 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் அதிக பட்சமாக கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.