1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 24 ஜூலை 2023 (07:55 IST)

4வது டெஸ்ட் டிரா.. ஆஷஸ் தொடரை தக்க வைத்தது ஆஸ்திரேலியா..!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணி ஆஷஸ் தொடரை இழக்காமல் தக்க வைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
கடந்த 19ஆம் தேதி ஆரம்பித்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்  ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 317 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி முதல் நிகழ்ச்சியில் 592 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் அடித்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில்  ஆஸ்திரேலியா 2 போட்டிகளிலும் இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வென்றுள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரே ஒரு போட்டி தான் மீதம் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய இந்த தொடரின் தோல்வியிலிருந்து தப்பித்துள்ளது.  
 
ஐந்தாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஜூலை 27ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியை இங்கிலாந்து வென்றால் தொடர் டிராவாகும் என்பதும் இங்கிலாந்து தோல்வி அடைந்தால் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva