1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 19 ஜூலை 2023 (07:58 IST)

ஆஷஸ் தொடரின் 4வது போட்டி இன்று தொடக்கம்.. தொடரை வெல்லுமா ஆஸ்திரேலியா?

ஆஷஸ் தொடரில் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளதை அடுத்து இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வென்றுள்ளது.
 
இந்த நிலையில் இன்று தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று விட்டால் தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இங்கிலாந்து அணி வென்றால் அடுத்த போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இன்றைய போட்டி இந்திய நேரப்படி மதியம் மூன்று முப்பது மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva