தொடர்புடைய செய்திகள்
- “கோலிதான் பெஸ்ட்… அவர்கிட்ட இருந்து அத நான் எடுத்துக்க முடியாது…” –ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்!
- மரணக் காட்டு காட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்… ஆஸிக்கு எதிரான தொடரை வென்ற இந்தியா!
- இலக்கு 400 ரன்கள்.. 35 ரன்களில் 2 விக்கெட் இழப்பு.. தடுமாறும் ஆஸ்திரேலியா..!
- இரண்டாவது ஒருநாள் போட்டியில் புகுந்த மழை! இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி தாமதம்!
- ஆசிய போட்டியில் கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி அபார வெற்றி.
நேற்றைய போட்டியில் இந்திய அணி படைத்த சாதனைகள் சில…!
உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே மொஹாலியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியை இந்திய அணி வென்றுள்ள நிலையில் நேற்று இந்தூரில் நடந்த இரண்டாவது போட்டியையும் 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி சில சாதனைகளை படைத்துள்ளது. நேற்றைய போட்டியில் இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் 3000 சிக்ஸர்கள் அடித்த முதல் அணி என்ற மைல்கல் சாதனையை எட்டியது.
நேற்று இந்திய அணி 399 ரன்கள் குவித்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. நேற்று கே எல் ராகுல் தலைமையில் வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணி அவர் தலைமையில் தொடர்ச்சியாக 9 முறை போட்டிகளை வென்றுள்ளது.
நேற்றைய வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 7 ஆவது ஒருநாள் போட்டித் தொடரை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்