1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (14:32 IST)

இரண்டாவது ஒருநாள் போட்டியில் புகுந்த மழை! இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி தாமதம்!

Ind vs Aus
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடந்து வரும் நிலையில் மழையால் போட்டி தாமதமாகியுள்ளது.



இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி தொடர் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர் முகமது ஷமி அட்டகாசமாக விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார்.

இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இந்தியா பேட்டிங் செய்து வந்த நிலையில் 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களை ஈட்டியுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் பார்ட்னஷிப் செட் ஆகியிருந்த நிலையில் மழை பெய்ய தொடங்கியதால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K