தொடர்புடைய செய்திகள்
- டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரன் குவிப்பு.! ஆட்ட நேர முடிவில் 119/1
- சிறந்த ODI வீரருக்கான Player Of The Year விருதை வென்றார் கோலி
- சச்சினின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
- ஜடேஜா, அஸ்வின் அபார பந்துவீச்சு.. 246 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து..!
- இங்கிலாந்தின் பேஸ்பால் அணுகுமுறைக்கு பதிலடி கொடுத்த அஸ்வின் & ஜடேஜா!
23 ஓவர்களுக்குள் மூன்று ரிவ்யூக்களையும் வேஸ்ட் ஆக்கிய இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் சேர்த்துள்ளது. ஜெய்ஸ்வால் 76 ரன்களிலும், சுப்மன் கில் 14 ரன்களிலும், ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர்.
முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்கள்க்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்களைக் கைப்பற்றினர்.
இந்தியா பேட்டிங் செய்யும் போது இங்கிலாந்து அணியினர் மிகவும் பதற்றத்துடனே காணப்பட்டனர். தேவையில்லாத அப்பீலுக்கெல்லாம் அவுட் கேட்டு தங்கள் ரிவ்யூக்களைக் காலி செய்தனர். இந்தியா நேற்று மொத்தம் 23 ஓவர்களே பேட்டிங் செய்தது. ஆனால் அதற்குள்ளாகவே இங்கிலாந்து அணி தங்கள் 3 ரிவ்யூக்களையும் வீணடித்தது.
அடுத்த கட்டுரையில்