திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2024 (11:17 IST)

இங்கிலாந்தின் பேஸ்பால் அணுகுமுறைக்கு பதிலடி கொடுத்த அஸ்வின் & ஜடேஜா!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலை ஐதராபாத்தில் தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன் படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் ஆக்ரோஷமான பேஸ்பால் கிரிக்கெட்டை ஆடினர்.

பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரின் ஓவர்களில் அதிரடி காட்டிய பேட்ஸ்மேன்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் ஓவர்களில் விக்கெட்களை இழந்தனர். அஸ்வின் இரண்டு விக்கெட்களையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து அணி 73 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.