திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2024 (20:47 IST)

சிறந்த ODI வீரருக்கான Player Of The Year விருதை வென்றார் கோலி

ஐசிசியின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த  ஒருநாள் வீரருக்கான Player Of The Year ஐ விராட் கோலி வென்றுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டிற்காக சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்தது. இதில், கேப்டனாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தலைமையிலான 11 வீரர்களை ஐசிசி தேர்வு செய்தது. இதில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கனவு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில், விராட் கோலி உள்ளிட்ட 6 இந்திய வீரர்கள் இடம்பிடித்து சாதனை படைத்தனர்.

இந்த நிலையில், ஐசிசியின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்  என்ற விருதை சூர்யகுமார் யாதவ் வென்றார்.

இந்த நிலையில், இன்று ஐசிசியின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த  ஒரு நாள் வீரருக்கான Player Of The Year ஐ விராட் கோலி வென்றுள்ளார். அதிகமுறை இந்த விருதை வென்ற வீரர் என்ற சாதனை  படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 2012, 2017, 2018, ஆகிய ஆண்டுகளில் இந்த விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இவர் 1 விக்கெட்டும், 1377 ரன்களும், 12 கேட்சுகளும் பிடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், 2023 ஆம் ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் வென்றார். இவர் 59 போட்டிகளில் 422 ரன்கள் அடித்து, 12 கேட்சுகள் பிடித்தததாக தெரிவித்துள்ளது.