செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (14:47 IST)

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஹாரி புரூக் புதிய சாதனை

hari brook
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஹாரி புரூக் டெஸ்ட் இன்னிங்ஸில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இன்றைய முதல் நாள் ஆட்டத்தில், பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்துள்ளது.

இதில், ஜெ ரூட் 101 ரன்களும், ஹாரி புரூக் 184 ரன் கள்( 169 பந்துகள்) அடித்தனர்.

இந்த நிலையில், சர்வதேச டெஸ்டில் அதிவேகமாக 800 ரன் களை( 803 பந்துகள்) கடந்த முதல் வீரர் புதிய சாதனையை ஹாரி புரூக் படைத்துள்ளார்.

இதுவரை 9 இன்னிங்ஸில் அவர் 4 சதம், 3 அரை சதம் அடித்துள்ளார்.

எனவே,  முதல் 9 டெஸ்டு இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் குவித்தவர் (807) என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதி, இரண்டாவது இடத்தில் வினோத் காம்ளி(798) உள்ளார்.

ஹாரி புரூக்கில் சராசரி 100 ஆகும். இதில், 3 வது இடத்தில் கவாஸ்கரும்(778) எவர்டன் வீக்ஸ்(777) 4 வது இடத்திலும் உள்ளனர்.