தொடர்புடைய செய்திகள்
- அலட்சியமும் பேராசையுமே காரணம்… சென்னை வெள்ளம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கோபம்!
- சென்னை புறநகர் ரயில் இன்று வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரயில்வே
- சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே தகவல்
- என்னுடைய டெஸ்ட் சாதனையை இந்த இந்திய வீரரால் முறியடிக்க முடியும்… லாரா கருத்து!
- பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்ற விருப்பம் தெரிவித்த முன்னாள் இந்திய கிரிக்கெட்டர்!
மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அபார வெற்றி..!
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 39.4 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஹோப் 68 ரன்களும் ரூதர்போர்டு 63 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 203 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 32.5 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. வில் ஜேக்ஸ் அபாரமாக விளையாடி 73 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர் சாம் கர்ரன் அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை எடுத்ததை எடுத்து அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
முதலாவது ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளதால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva