தொடர்புடைய செய்திகள்
- தெலுங்கு சினிமாவில் சாதனைப் படைத்த பிரபாஸின் சலார் திரைப்படம்!
- முதன் முதலாக ஓடிடியில் லியோ திரைப்படம் படைக்கப் போகும் சாதனை!
- ஐபிஎல் ஏலத்தில் மோஸ்ட் வாண்டட் ஆகப்போகும் ரச்சின் ரவீந்தரா… அடிப்படை விலை இவ்வளவுதானா?
- கோலி, ராகுல் ஆகியோரின் சாதனையை நேற்றைய போட்டியில் முறியடித்த ருத்துராஜ்!
- டி 20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த இந்திய அணி… பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி முதலிடம்!
என்னுடைய டெஸ்ட் சாதனையை இந்த இந்திய வீரரால் முறியடிக்க முடியும்… லாரா கருத்து!
டெஸ்ட் போட்டிகளில் ஒரு தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராக பிரையன் லாராவின் 400 ரன்கள் உள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். அதன் பின் யாராலும் அந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை. அந்த சாதனையை தகர்க்க விரைவாக ரன்களைக் குவித்தும் விக்கெட்டை இழக்காமலும் விளையாட வேண்டிய நிர்பந்தம் உள்ளது.
இந்நிலையில் தன்னுடைய இந்த சாதனையை இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில்லால் முறியடிக்க முடியும் எனக் கூறியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரையன் லாரா தனது சாதனையை இந்தியாவைச் சேர்ந்த இருவரால் முறியடிக்க முடியும் எனக் கூறியிருந்தார்.
அதில் தற்போதைய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோஹித் ஷர்மாவின் பெயரையும் 19 வயதான பிருத்வி ஷாவின் பெயரையும் கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது ஷுப்மன் கில்லின் பெயரை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்