1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ajay jadeja ready to coach Pakistan team

பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்ற விருப்பம் தெரிவித்த முன்னாள் இந்திய கிரிக்கெட்டர்!

Indian Team
இந்திய அணிக்காக 90 களில் பல ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் அஜய் ஜடேஜா. இந்திய அணியை சில போட்டிகளில் கேப்டனாகவும் வழிநடத்தியுள்ளார். 2000 ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் சிக்கி சர்வதேச போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் வர்ணனையாளராக பணியாற்றி வந்த ஜடேஜா,  கடந்த உலகக் கோப்பை தொடரின் போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் உள்ளிட்ட சில முன்னணி அணிகளை வென்றது.

இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட வேண்டிய சூழல் வந்தால் அதை ஏற்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜடேஜா ”நான் தயார்” என பதிலளித்துள்ளார். 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
என்னுடைய டெஸ்ட் சாதனையை இந்த இந்திய வீரரால் முறியடிக்க முடியும்… லாரா கருத்து!