தொடர்புடைய செய்திகள்
- “வீரமே ஜெயம்”… சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் புதிய போஸ்டர்!
- ஒரு நாள் போட்டிகளில் முக்கியத்துவம் பெரும் ஹர்திக் பாண்ட்யா… தினேஷ் கார்த்திக் சொல்லும் கருத்து!
- “தவானுடைய கிரிக்கெட் வாழ்க்கை இப்படி முடியக் கூடாது…” - முன்னாள் வீரர் ஆதரவு!
- டெஸ்ட் அணிக்குக் கேப்டனாக செயல்பட அஸ்வின் தகுந்த நபர்… பாக் வீரர் பாராட்டு!
- இன்னும் ஒன்றே ஒன்றுதான்.. சச்சினை நெருங்கும் அஸ்வின்!
உலகக் கோப்பையின் இறுதியில் அஸ்வின் சரியாக விளையாட வில்லை – தினேஷ் கார்த்திக்!
2022 ஆம் ஆண்டு நடந்து முடிந்த டி 20 உலகக்கோப்பை தொடர் இந்திய அணிக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
இந்த தொடரில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறியது. இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோரின் அணித்தேர்வு குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இந்த தொடர் முழுவதும் சஹாலுக்கு வாய்ப்பளிக்கப் படாதது கேள்விகளை எழுப்பின.
இந்நிலையில் இந்திய அணிக்காக டி 20 உலகக்கோப்பையில் சில போட்டிகளில் விளையாடிய தினேஷ் கார்த்திக்கும் அதை குறிப்பிட்டுள்ளார். இது சம்மந்தமாக அவர் “அணியில் வீரர்கள் தேர்வு என்பது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் வீரர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை பொறுத்தது. ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் தொடரின் இறுதியில் சிறப்பாக விளையாடவில்லை. அணியில் சஹால் இடம்பெற்றிருந்தால், அவர் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை” எனக் கூறியுள்ளார்.