தொடர்புடைய செய்திகள்
- அஸ்வின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் - இங்கிலாந்து வீரர் ஜென்னிங்ஸ்
- டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் பேட்டிங்
- தமிழகத்தில் இருக்கும் தமிழர்கள் அகதிகளா? மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு
- தோனி தவறியதை விராட் கோஹ்லி செய்வாரா?
- விராட் கோஹ்லியை வீழ்த்த இங்கிலாந்து அணிக்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அறி்வுரை
போடு மாமா.. அப்படியே போடு மாமா...: மைதானத்தில் அஸ்வின் - தினேஷ் கார்த்திக்!
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், அஸ்வினை ஊக்கப்படுத்தும் விதத்தில் மைதானத்தில் தமிழில் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் அஸ்வின் பந்துவீசும் போது, கீப்பிங்கில் இருக்கும் தினேஷ் கார்த்திக் அந்த டேய்..டேய்..டேய்.. வேற மாதிரி டா நீ...போடுறா மாமா.. நல்லாருக்கு அஷ்வின்.. போடு மாமா.. போடு மாமா.. அடுத்த மூணு பாலையும்.. அப்படியே போடு.. என்ன பண்ணுறான்னு பாக்கலாம் அஷ்வின்..
ரொம்ப கிட்ட வேண்டாம், இவனுக்கெல்லாம் சாதரணமா பால் போடு, ஒரு ரன் போன பரவாயில்ல...கால்ல பட்டா காலி.. பொறுமையா பால் போடு அஷ்... என்று கூறுகிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது, தினேஷ் கார்த்திக் இவ்வாறு தமிழில் பேசுவது அஸ்வினுக்கு ஊக்கமாகவும், இங்கிலாந்து வீரர்களை திசை திருப்பும் முயற்சியாவும் இருக்கிறது.
அடுத்த கட்டுரையில்