டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் பேட்டிங்

Cricket
Last Updated: புதன், 1 ஆகஸ்ட் 2018 (15:29 IST)
டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
 
இன்று நடைபெற உள்ள முதல் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இங்கிலாந்து தொடர் என்றாலே இந்திய அணிக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
இதுவரை இங்கிலாந்து தொடரில் கபில் தேவ், கங்குலி, டிராவிட் ஆகிய கேப்டன்கள் மட்டுமே சாதனை படைத்துள்ளனர். இந்திய அணியின் வெற்றி கேப்டனாக தோனி கருதப்பட்டாலும் இங்கிலாந்தில் சாதிக்க தவறிவிட்டார்.
 
அந்த வகைகியில் தற்போது விராட் கோஹ்லி மீது இந்த சாதனை எதிர்பார்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்து நடைபெறும் டெட்ஸ்ட் தொடர் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :