தமிழகத்தில் இருக்கும் தமிழர்கள் அகதிகளா? மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

Last Modified புதன், 1 ஆகஸ்ட் 2018 (06:58 IST)
லோக்சபாவில் நேற்று அகதிகள் குறித்து பேசிய மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு, 'வங்கதேசம், மியான்மர், மற்றும் தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் அகதிகள் வருவதாக கூறியதை அதிமுக எம்பிக்கள் கண்டித்தனர்.
இந்தியாவின் ஒரு பகுதியாக தமிழகம் இருக்கும்போது, இந்தியாவிற்குள் வரும் தமிழர்கள் அகதிகளா? என்று கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த கிரண் ரிஜிஜு, 'இலங்கையில் இருந்து அகதிகளாக வரும் தமிழர்கள்' என்று கூறுவதற்கு பதிலாக தவறுதலாக தமிழகத்தில் இருந்து வரும் தமிழர்கள்' என்று கூறிவிட்டதாகவும், அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.
இதனையடுத்து அதிமுக எம்பிக்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமாதானப்படுத்தி, 'மத்திய அமைச்சர் வாய்தவறி கூறிவிட்டதாக கூறி அதிமுக எம்பிக்களை அமருமாறு கேட்டுக்கொண்டார். இதனால் சிறிது நேரம் லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :