1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Dhoni talked about the toughest bowler he faced

நான் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலர்கள் இவர்கள்தான்.. தோனி ஓபன் டாக்!

தோனி
கடந்த சில ஆண்டுகளாக தோனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான். அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. ஆனாலும் அவரை தற்போது சி எஸ் கே அணி அன்கேப்ட் ப்ளேயர் எனும் விதியின் மூலம் தக்கவைத்துள்ளது.

சர்வதேச போட்டிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை அன்கேப்ட் பிளேயராக அறிவித்துள்ளது பிசிசிஐ. இதன்மூலம் தோனி அன்கேப்ட் பிளேயர் ஆகிறார். இதனால் அவரைக் குறைந்த தொகையான 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே நிர்வாகம்  தக்கவைத்தது. இதனால் வரும் சீசனில் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது நீங்கள் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலர் யார் என்று கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதற்கு “சுனில் நரேன் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகிய இருவர்தான்” எனப் பதிலளித்துள்ளார். இருவருமே ஐபிஎல் தொடரில் தோனிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
vinoth