‘நான் செய்த தவறு அது’.. ஐபிஎல் போட்டியில் நிதானம் தவறியது குறித்து தோனி வருத்தம்!
கடந்த சில ஆண்டுகளாக தோனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான். அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. ஆனாலும் அவரை தற்போது சி எஸ் கே அணி அன்கேப்ட் ப்ளேயர் எனும் விதியின் மூலம் தக்கவைத்துள்ளது.
சர்வதேச போட்டிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை அன்கேப்ட் பிளேயராக அறிவித்துள்ளது பிசிசிஐ. இதன்மூலம் தோனி அன்கேப்ட் பிளேயர் ஆகிறார். இதனால் அவரைக் குறைந்த தொகையான 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்தது. இதனால் வரும் சீசனில் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
சென்னை வந்துள்ள அவர் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் தான் ஒரு முறை நிதானம் தவறியது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் “நான் ஒருமுறை அவுட் ஆன பின்னரும் மைதானத்துக்குள் சென்றேன். அது தவறு.” எனக் கூறியுள்ளார்.