திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2023 (08:20 IST)

இன்றைய போட்டியில் தோனி விளையாட மாட்டாரா? சி எஸ் கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

சி எஸ் கே அணிக்கு 2008 ஆம் ஆண்டு முதல் தலைமை பொறுப்பேற்று சிறப்பாக அணியை வழிநடத்தி செல்கிறார் தோனி. கடந்த ஆண்டு அவருக்கு பதில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டு, பின்னர் தொடரின் இறுதியிலேயே சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகியதை அடுத்து கடந்த ஆண்டு சி எஸ் கே அணியை இறுதி போட்டிகளில் தோனி வழிநடத்தினார். அதனால் இந்த ஆண்டும் அவரே கேப்டனாக செயல்பட உள்ளார்.

இந்த ஆண்டு தொடரின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கான போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் காயம் காரணமாக தோனி விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ஜடேஜா அல்லது ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டன் பொறுப்பை ஏற்கலாம் என சொல்லப்படுகிறது.