1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated: வெள்ளி, 31 மார்ச் 2023 (21:43 IST)

ஐபிஎல் -2023: ருதுராஜ் அதிரடி பேட்டிங்...குஜராத் டைட்டன் அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்கு!

chennai kings -gurajarath
ஐபிஎல் -16 வது சீசன் இன்று முதல் தொடங்கியுள்ளத நிலையில் இன்றைய முதல் போட்டியில், சென்னை கிங்ஸ் அணி  179 ரன்களை  குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு  வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

உலகம் முழுவதிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள ஐபிஎல் -16 வது சீசன் இன்று குஜராத் தலை நகர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது.

இதில், நடப்பு சேம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை அணி  மோதுகின்றது.

இன்றைய போட்டியில், டாஸ் வென்ற  குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்த்திக் பாண்டியா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

சென்னை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதில், ருத்ராஜ் 92 ரன்களும்( (50 பந்துகள்), மொயின் அலி 23 ரன்களும், தோனி 14 ரன்களும் அடித்தனர். எனவே சென்னை கிங்ஸ் அணி 20 ஒவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் அடித்து, குஜராத் டைட்டன்ஸ் அனிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்கு ந நிர்ணயித்துள்ளது.

குஜராத் அணி தரப்பில், சமி, ரிஷத்கான், ஜோசப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.ஜோசுவா 1 விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்து, குஜராத் அணி வெற்றி இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய்வுள்ளது.