1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (19:36 IST)

ஐபிஎல் 2023: லக்னோ ஜெயிண்ட் அணி பவுலிங் தேர்வு

ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ ஜெயிண்ட் அணி பந்து வீச்சு தேர்வு  செய்துள்ளது.  

இந்தியாவில் 16 வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி முதல் தொடங்கி  நடந்து வரும் நிலையில்,  ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய போட்டியில், லக்னோ ஜெயிண்ட் அணியை எதிர்த்து ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
எனவே சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்வாட் மற்றும் கான்வே ஆகியோர் இறங்கியுள்ளனர்.

ஏற்கனவே சென்னை அணி முதல் போட்டியில் தோற்ற நிலையில், இப்போட்டியில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.