கோலியை தோனி அணியில் இருந்து நீக்காமல் காப்பாற்றினார் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!
இந்திய அணியின் கேப்டனாக சிறந்து விளங்கு கோலியை அணியை விட்டு தூக்காமல் தோனி காப்பாற்றினார் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் கோலி தற்போது உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு முதல் அவர் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்து அணியை முதல் இடத்துக்கு கொண்டு வந்து உலகின் சிறந்த டெஸ்ட் அணியாக இந்தியாவை மாற்றினார். இப்போது ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில் கோலியை டெஸ்ட் அணியில் இருந்து நீக்குவதை தோனிதான் தடுத்தார் என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.
அதில் 2011-2012 ஆம் ஆண்டு அஸ்திரேலிய தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களில் கோலி மட்டுமே சதம் அடித்தார். ஆனால் அவர் மிகவும் இளையவராக இருந்ததால் அவரை அணியில் இருந்து நீக்க முடிவு செய்தனர். ஆனால் தோனிதான் அதை தடுத்து கோலியை காப்பாற்றினார். அந்த வாய்ப்பை கோலி சிறப்பாக பயன்படுத்தினார். தன் பின்பு 2014-2015 இல் 4 சதங்களை விளாசினார். எனக் கூறியுள்ளார்.