தொடர்புடைய செய்திகள்
- தொடரும் கந்துவட்டி கொடுமை; குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சோகம்!
- 41 தொகுதிகள் தருபவர்களுடன் கூட்டணி: பேரத்தை முன்வைத்த பிரேமலதா?
- சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா: அனைத்து துறைகளையும் மூட உத்தரவு
- நீண்ட காலத்திற்கு பின் சுற்றுலா தளங்கள் திறப்பு! – சூடுபிடிக்குமா சுற்றுலா தொழில்?
- தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி க்ளினிக்! – முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்!
குறைந்தது தங்கத்தின் விலை: இன்று எவ்வளவு தெரியுமா?
கடந்த சில நாட்களில் மெல்ல விலை அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று திடீரென அதிக தொகைக்கு விலை குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.
இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை தீபாவளிக்கு பிறகு ஒரு வாரத்திற்கு விலையில் சரிவை சந்தித்தது. பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் இன்று மீண்டும் விலை சரிந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 குறைந்து ரூ.4,627 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,016-க்கு விற்பனையாகிறது.
