தொடர்புடைய செய்திகள்
- கழிவுநீர் கால்வாயில் கிடந்த செல்லாத 1000 ரூபாய் நோட்டுகள்: கடலூரில் பரபரப்பு
- மீண்டும் தமிழகத்திற்கு காத்திருக்கும் கனமழை! – வானிலை ஆய்வு மையம்!
- தானிய உற்பத்தியில் சீனாவின் சாதனை
- மூளையை இயக்கி சுறுசுறுப்படைய செய்யும் தோப்புக்கரணம் !!
- சென்னையில் இருந்து பெங்களூரு, விஜயவாடாவுக்கு சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு!
அடுத்த ரவுண்டு மழைக்கு ரெடி ஆகுங்க மக்களே!!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 16 முதல் 18 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 16 முதல் 18 வரை கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
