செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (12:32 IST)

இவரு எம்.ஜி.ஆர்? ராமாபுரத்தில் கட்டிப்போட்டு அடி விழும்: சீமான் சாடல்!

ரஜினிகாந்தை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவதை குறித்து சீமான் விமர்சித்துள்ளார். 

 
ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் கட்சியில் தொடங்கி அரசியலில் ஈடுபடுவதை உறுதி செய்தார். டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிப்பேன் என்றும் வரும் தேர்தலில் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் கூறினார்.     
 
மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி அவர்களும் தலைமை ஆலோசகராக தமிழருவி மணியன் அவர்களையும் அவர் நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினியை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவதை குறித்து சீமான் விமர்சித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, ரஜினியை மறைந்த முதல்வர் எம்ஜிஆருடன் ஒப்பிடுகின்றனர். அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் ரஜினியை மீண்டும் ராமபுரம் தோட்டத்தில் கட்டிப்போட்டு அடித்திருப்பார். 
 
ரஜினிக்காக அவர்களது ரசிகர்கள் செய்யும் பைத்தியக்காரத்தனத்தை மேலைநாடுகள் பார்த்தால் நம்மை என்னவாக நினைப்பார்கள். தன்னை ரசிக்கும் ரசிகனைச் சரியாக வழி நடத்த முடியாத ரஜினி எப்படி இந்த நாட்டை வழி நடத்துவார் என்பதுதான் இப்போது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது என விமர்சித்துள்ளார்.