தொடர்புடைய செய்திகள்
- நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்தது பங்குச்சந்தை.. ஆனாலும் முதலீட்டாளர்கள் அச்சம்..!
- சாம்பியன்ஸ் கோப்பையில் இருந்து வெளியேற்றம்.. மீண்டும் மாற்றப்படுகிறாரா பயிற்சியாளர்?
- வங்கதேசத்திற்கு எதிரான போட்டி.. நியூசிலாந்து வெற்றியால் வெளியேறியது பாகிஸ்தான்..!
- நான் ரன்கள் அடித்துவிடக் கூடாது எனப் பயந்தேன்… அக்ஸர் படேல் சொன்ன தகவல்!
- இந்தியா பாகிஸ்தான் போட்டியைக் காணவந்த ஜாஸ்மின் வாலியா… மீண்டும் பரவும் காதல் கிசுகிசு!
டாஸை மட்டும்தான் வென்றீர்கள்… உங்களால் ஏமாற்றம் அடைந்தேன் – பாகிஸ்தான் அணியை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்!
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், நேற்று நடந்த நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு சுக்கு நூறானது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாகிஸ்தான் அணியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் “எங்கள் அணியை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். ஆனால் இந்தியா பாகிஸ்தான் போட்டி ஏமாற்றம் அளித்தது. யாராக இருந்தாலும் கடுமையான ஒரு போட்டியைக் காண விரும்புவார்கள்.
டாஸ் தவிர்த்து, போட்டியின் எந்த அம்சத்தில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள். விளையாட்டில் வெற்றி தோல்விகள் வரும். ஆனால் நீங்கள் தோற்றால் கூட பார்வையாளர்களின் மனங்களை வெல்லும் சூழல் வரும். பாகிஸ்தான் அணியினர் இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் அதைக் கூட செய்யவில்லை” எனக் கூறியுள்ளார்.