செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 நவம்பர் 2018 (19:18 IST)

எங்களை சேர்த்து வைத்தவர் இவர் தான்? தோனி மனைவி உடைத்த உண்மை!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவியான சாக்‌ஷியின் பிறந்தநாள் சமீபத்தில் மும்பையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சாக்‌ஷியின் 30-வது பிறந்தநாள் பார்ட்டியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தி இருந்தனர். 
 
இந்த பிறந்த நாள் விழாவில் கிரிக்கெட் வீரர்கள் ராபின் உத்தப்பா, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
இந்த  நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால், மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராபின் உத்தப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து 'இவர் தான் நானும், மஹியும் வாழ்வில் இணைவதற்கு காரணம், என தெரிவித்துள்ளார். 
 
நீண்ட நாட்களாக தோனி , உத்தப்பா இருவரும் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.  ஆனால் இருவரின் காதலுக்கு உத்தப்பா எப்படி உதவி செய்தார்? என்பது தான் புரியாத புதிராக உள்ளது.