77 ரன்கள் அடித்த வங்கதேச கேப்டன் ஷாண்டோ அவுட்.. நியூசிலாந்து அபார பந்துவீச்சு..!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று வங்கதேச மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்ற நிலையில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனால், வங்கதேச அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 41 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது.
கேப்டன் ஷாண்டோ மிக அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், 77 ரன்கள் அடித்த போது அவுட் ஆனார். அவரை தவிர, மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் எடுக்கவில்லை என்பதால், வங்கதேச அணியின் ஸ்கோர் குறைவாக உள்ளதாக குறிப்பிடலாம்.
ஏற்கனவே பாகிஸ்தானை வீழ்த்தியுள்ள நியூசிலாந்து, இன்றைய போட்டியில் எளிய இலக்கை வங்கதேச அணி கொடுத்தால் எளிதில் வென்றுவிடும். இதனால் ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவை முந்தி முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் மைக்கேல் பிரேஸ்வெல் மிக அபாரமாக பந்து வீசி, 26 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran