மகளிர் பிரீமியர் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் பெங்களூரு அணி தோல்வி..!
மகளிர் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் பெங்களூரு மற்றும் உத்தரப் பிரதேச அணிகள் மோதினர்.
இந்த போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து, 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி உத்தரப் பிரதேச அணி விளையாடிய போது, அந்த அணியும் 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தது.
இதனால், வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்ய சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த உத்தரப் பிரதேச அணி வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், வெற்றிக்காக 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் களமிறங்கிய பெங்களூரு அணி, தோல்வி அடைந்தது.
அந்த அணி சூப்பர் ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்ததால், உத்தரப் பிரதேச அணி அபாரமாக வெற்றி பெற்றது. உத்தரப் பிரதேச அணிக்காக கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்து, அணியை சூப்பர் ஓவருக்கு அழைத்துச் சென்றவர் எக்லெஸ்டோன் என்பவரே. அது மட்டும் இல்லை, அவர் சூப்பர் ஓவரில் பந்துவீசி, ரன்களை கட்டுப்படுத்தி, உத்தரப் பிரதேச அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால், அவர் ஆட்ட நாயகி விருது வென்றார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
Edited by Siva