செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By VM
Last Updated : ஞாயிறு, 25 நவம்பர் 2018 (13:33 IST)

எப்படி இருக்கீங்க?!’ - மழலை தமிழில் மகள் கேட்ட கேள்விக்கு தோனி அளித்த பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி, தனது மகளுடன் தமிழில் உரையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் , தனது குடும்பத்தினருடன்  நேரம் செலவிட்டு வருகிறார் தோனி. 
 
மகள் ஸிவாவுடன் தமிழில் உரையாடுவது போன்ற வீடியோ ஒன்றை தோனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். `Greetings in Two languages' என்ற தலைப்பில் தோனி பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், ``எப்படி இருக்கீங்க?’ என ஸிவா கொஞ்சும் தமிழில் கேட்க, `நல்லா இருக்கேன்’ என தோனி தமிழில் பதில் அளித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.