இந்தியாவின் கோட்டீஸ்வரர்கள் "அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், தோனி" - சர்வே

Last Modified புதன், 21 நவம்பர் 2018 (18:47 IST)
இந்தியாவின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் அமிதாப் பச்சன்  முதலிடத்தை தக்கவைத்துள்ளார். 
 
இன்புளூனர்சர் இன்டெக்ஸ் 2018 (YouGov Influencer Index 2018)  செல்வாக்கு  மிக்கவர்கள் குறித்து ஆய்வு நடத்தி இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க  மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 
 
இதில், முதல் இடத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், இரண்டாவது இடத்தில் தீபிகா படுகோனே,  மூன்றாவது இடத்தில் தோனி, 4 -வது இடத்தில் சச்சின் டெண்டுல்கர்,  5-வது இடத்தில்  நடிகர் அக்க்ஷய் குமார், 6-வது இடத்தில் கேப்டன் விராட் கோலி, அமீர்கானும், ஷாருக்கானும் முறையே 7-வது மற்றும் 8-வது இடத்தை பிடித்துள்ளனர். 
 
நடிகைகள் ஆலியா பட் 9-வது இடத்தையும், பிரியங்கா சோப்ரா 10-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
 
இந்தியாவில் உள்ள 60 பிரபலங்கள் குறித்து, உலகளவில் சுமார் 60 லட்சம் பேரிடம் ஆன்லைன் வழியாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவாக இதை வெளியிடப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :