1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A case filed against annamalai at chennai

சென்னையில் அனுமதியின்றி பேரணி.. அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!

annamalai
சென்னையில் காவல்துறையினர் அனுமதி இன்றி பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 3500 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
பிரபு என்ற ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் மெழுகுவர்த்தி பிரம்மாண்டமான பேரணி நடத்தினார்.
 
 இந்த பேரணியில் சுமார் 3,500 பேர் கலந்து கொண்ட நிலையில் அண்ணாமலை உள்பட 3500 பேர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அனுமதி இன்றி மெழுகுவர்த்தி பேரணி நடத்தியதாகவும் சட்டவிரோதமாக கூடியதாகவும் அண்ணாமலை உள்பட 3500 பேர் உங்கள் மீது மூன்று பிரிவுகளையும் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால்தான் திமுக அரசை திருத்த முடியும். விந்தியா பிரச்சாரம்..!