ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (15:18 IST)

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய மனு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

court
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 
 
கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு சட்டங்கள் இருந்தும் பண விநியோகம் நடைபெறுகிறது என்றும் தேர்தல் ஆணையம் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எனவே ஈரோடு கிழக்கு தேர்தலை தடை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். 
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஏற்கனவே மற்றொரு வழக்கில் இது சம்பந்தமான நிவாரணங்கள் வழங்கப்பட்டு விட்டதாக கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து திட்டமிட்டபடி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran