1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2023 (13:30 IST)

சென்னையில் திடீர் நில அதிர்வு? ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

chennai
சென்னையில் திடீர் நில அதிர்வு? ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
சென்னையில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து சென்னை அண்ணா சாலையில் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 50,000 பேர் பலியாகினார். இந்த நிலையில் இன்று சென்னை அண்ணாசாலை அருகே உள்ள ஒயிட் சாலையில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களில் உள்ளவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை என்றும் அந்த பாடிய மெட்ரோ ரயில் பணிகள் நடந்து கொண்டிருப்பதால் நில அதிர்வு போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்து அதன் பின் மீண்டும் கட்டிடங்களுக்குள் செல்ல ஆரம்பித்தனர்.
 
Edited by Mahendran