1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. David warner may not be playing in second innings

வார்னரைத் தாக்கிய சிராஜின் பவுன்சர்… இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுவாரா?

இந்தியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த ஆஸி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 263 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியில் முகமது சிராஜ் வீசிய இரண்டு அபாயமான பவுன்சர்கள் வார்னரை கையிலும் ஹெல்மெட்டிலும் தாக்கின. இதையடுத்து அவர் தற்போது கன்கஷன் சோதனைக்கு உள்ளாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் அவர் இப்போது பீல்டிங்கும் செய்யவில்லை. இது பற்றி பேசிய ஆஸி அணி வீரர் உஸ்மான் கவாஜா “அவர் மிகவும் சோர்வாக உள்ளார். அவர் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுவாரா என்பது குறித்து மருத்துவர்கள் அறிவிப்பார்கள்” எனக் கூறியுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
“ரிஷப் பண்ட்டிடம் பேசினேன்.. முழுதாக குணமாக…”- ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!