1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (15:26 IST)

டெஸ்ட் போட்டிகளில் 1000 விக்கெட்கள்… வலுவான பார்ட்னர்ஷிப் போட்ட ஆண்டர்சன் & ப்ராட்!

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். 40 வய்திலும் டெஸ்ட் போட்டிகளில் ஆர்வமாக விளையாடி வரும் அவர் முடிந்தால் 50 வயது வரை விளையாடுவேன் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இவரும் ஸ்டுவர்ட் பிராடும் சேர்ந்து விளையாடிய போட்டிகளில் சுமார் 1000 விக்கெட்களைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளனர். 133 டெஸ்ட் போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ள இவர்கள் இந்த சாதனையைப் படைக்கும் இரண்டாவது இணையாகும். இதற்கு முன்பாக ஷேன் வார்ன் மற்றும் மெக்ராத் ஆகியோர் இணைந்து 1001 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.