செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (15:27 IST)

டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்கள்- மைல்கல்லை எட்டிய ரவிந்தர ஜடேஜா!

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் ரவிந்தர ஜடேஜா.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்தியா பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டது. இந்த போட்டியில் மொத்தம் 7 விக்கெட்களும் 70 ரன்களும் சேர்த்த ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து இன்று நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் ஒரு விக்கெட் வீழ்த்திய போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
இதுவரை 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 250 விக்கெட்களும், 2593 ரன்களும் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.