1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Danish kaneria spoke about virat kohli

கோலி உலகக்கோப்பையில் இடம்பெற இதை செய்யவேண்டும்… பாக் வீரரின் அட்வைஸ்!

கோஹ்லி
ஜிம்பாப்வே செல்லும் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கோஹ்லி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இடம்பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் முன்னணி வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த இளம் அணிக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு பின்னர் கே எல் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பிசிசிஐக்கு விராட் கோஹ்லி ஆசியக்கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ளார். இதையடுத்து நடக்கும் டி 20 உலகக்கோப்பை தொடருக்கு இந்த ஆசியக் கோப்பை தொடர் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதில் இருந்தே டி 20 உலகக்கோப்பைக்கான அணி தேர்வு இருக்கும் என நம்பலாம்.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கோலி, உலகக்கோப்பை தொடரில் இடம்பெறவேண்டும் என்றால் அவர் ஆசியக்கோப்பையில் சிறப்பாக விளையாட வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் “அவரைக் கண்டு பாகிஸ்தான் அணி அஞ்சுகிறது. அவர் தன்னுடைய பழைய ஆட்டத்தை மீட்டெடுத்தால் அது எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
40 ஆண்டுகால வரணனையாளர்… இயான் சேப்பல் ஓய்வு பெற முடிவு