திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் மாற்றம்… திடீர் எண்ட்ரி கொடுத்த வீரர்

கே எல் ராகுல் தற்போது 16 ஆவது வீரராக ஜிம்பாப்வே செல்லும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஜிம்பாப்வே செல்லும் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் கோஹ்லி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இடம்பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் முன்னணி வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த இளம் அணிக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் இப்போது இந்த தொடருக்கான அணியில் கே எல் ராகுல் திடீரென்று சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஷிகார் தவான் தற்போது துணைக் கேப்டனாக மாற்றப்பட்டுள்ளார்.

அணி விவரம்
கே எல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (து.கேப்டன்), ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் த்ரிபாட்டி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல், ஆவேஸ் கான், பிரசீத் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.