வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (09:21 IST)

கவுண்ட்டி போட்டியில் அதிரடி சதம் அடித்த புஜாரா… கம்பேக்குக்குத் தயார்!

இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான புஜாரா தற்போது டெஸ்ட் அணிக்கான போட்டிகளில் இடம் கிடைக்காமல் போராடி வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் மோசமான பார்மில் இருந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் பங்களிப்புக்காக அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதற்கிடையே தனது கம்பேக்குக்காக புஜாரா தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி வருகிறார். அந்த வகையில் தற்போது இங்கிலாந்து கவுண்ட்டி போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடந்த ஒரு போட்டியில் சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் அவர் 131 பந்துகளில் 20 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 174 ரன்கள் எடுத்தார். இது லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னர் ஒரு போட்டியில் 79 பந்துகளில் 107 ரன்கள் அடித்தார். இதுபோல தொடர்ந்து அதிரடியாக விளையாடி இந்திய கிரிக்கெட்டில் தனது கம்பேக்குக்குத் தயார் என்பதை அறிவித்துள்ளார்.