வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 30 நவம்பர் 2023 (07:14 IST)

தோனி இன்னும் 3 சீசன்கள் கூட விளையாடுவார்… உற்சாகமாக பதிலளித்த டிவில்லியர்ஸ்!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடர் போட்டிக்காக அனைத்து அணிகளும்  தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் குறித்த தகவலை தெரிவித்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி உள்பட 18 வீரர்கள் தக்க வைத்துக் கொள்ளப்பட்டனர்.

பென் ஸ்டோக்ஸ் உள்பட 8 வீரர்கள்  சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் மீண்டும் தோனி 2024 ஆம் ஆண்டில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சீசனோடு தோனி, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் பெயர் மீண்டும் அணியில் இருப்பது கோடிக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.

இது பற்றி தன்னுடைய யுடியூப் சேனலில் பேசியுள்ள தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் “தோனியின் பெயரை சிஎஸ்கே அணியில் பார்த்ததும் எனக்கு உற்சாகமாக இருந்தது. தோனி எப்போதுமே ஆச்சர்யமான வீரர்தான். யாருக்கு தெரியும் தோனி இன்னும் சில சீசன்கள் கூட விளையாடுவார் என்று தோன்றுகிறது.” எனக் கூறியுள்ளார்.