1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2023 (07:51 IST)

மீண்டும் சிஎஸ்கே அணியில் தோனி.. தக்க வைக்கப்பட்ட 18 வீரர்கள்..!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடர் போட்டிக்காக அனைத்து அணிகளும்  தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் குறித்த தகவலை தெரிவித்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி உள்பட 18 வீரர்கள் தக்க வைத்துக் கொண்டனர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  
 
பென் ஸ்டோக்ஸ் உள்பட 8 வீரர்கள்  சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் மீண்டும் தோனி 2024 ஆம் ஆண்டில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் சிஎஸ்கே அணியில் கான்வே, ருத்ராஜ், ரஹானே, ஜடேஜா, சாண்ட்னர், மொயின் அலி, ஷிவம் துபெ, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ஹங்கர் சேகர், தீபக் சஹார், தீக்சனா, முகேஷ் செளத்ரி, சோலங்கி, சிமர்ஜீத் சிங், தேஷ்பாண்டே, பதிரானா   ஆகியோர் அணியல் உறுதி செய்யப்பட்டுள்ளனர். 
 
தொனி உள்பட 18 வீரர்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து வீரர்களும்  மீண்டும் ஒருமுறை சிஎஸ்கே அணிக்கு கோப்பையை வாங்கி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva