1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: சனி, 27 மே 2023 (12:46 IST)

30 ரன்களில் சுப்மன் கில் கொடுத்த கேட்ச்சை விட்ட டிம் டேவிட்… அந்த தவறுக்கு கொடுத்த விலைதான் தோல்வி!

நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணிக்கு எதிரான பைனலில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் குஜராத் அணி வீரர் 60 பந்துகளில் 129 ரன்கள் விளாசி பேயாட்டம் ஆடினார். அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடக்கம்.

அரைசதம் அடிக்கும் வரை நிதானமாக விளையாடிய அவர் அதன் பின்னர் அதிரடியில் இறங்கி அடுத்த ரன்களில் சதமடித்தார். இந்த போட்டியில் கில் 30 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை மிட் ஆனில் நின்ற டிம் டேவிட் பிடிக்க முயன்று தவறவிட்டார். அதன் பிறகுதான் கில் தனது சூறாவளி இன்னிங்ஸை ஆடினார். அந்த கேட்ச்சால் தான் மும்பை வசம் இருந்து மேட்ச் பறிபோனது என சொன்னால் அது மிகையாகாது.