1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

ஒரே போட்டியில் இத்தனை சாதனைகள் தகர்ப்பா? சுப்மன் கில் செய்த தரமான சம்பவம்!

நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணிக்கு எதிரான பைனலில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் குஜராத் அணி வீரர் 60 பந்துகளில் 129 ரன்கள் விளாசி பேயாட்டம் ஆடினார். அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடக்கம். இந்த இன்னிங்ஸின் மூலம் அவர் சில சாதனைகளை படைத்துள்ளார்.
  • ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டி ஒன்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சேவாக்கின்(122) சாதனையை தகர்த்துள்ளார்.
  • ப்ளே ஆஃப் போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்
  • ப்ளே ஆஃப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த மிக இளம் வயது வீரர்
  • ஐபிஎல் சீசன் ஒன்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேற்றம். இந்த சீசனில் அவர் 851 ரன்கள் அடித்துள்ளார்.