ஞாயிறு, 24 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 மே 2023 (08:09 IST)

ஜெய்ஸ்வாலை ஒருநாள் உலக்கோப்பையில் சேர்க்கக் கூடாது! – தினேஷ் கார்த்திக் கருத்து!

Jaiswal
ஐபிஎல் போட்டிகளில் கலக்கி வரும் ஜெய்ஸ்வாலை ஒருநாள் உலகப்போட்டியில் சேர்ப்பது குறித்து தினேஷ் கார்த்திக் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியவர் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். ராஜஸ்தான் அணிக்காக சதம், அரைசதங்கள் விளாசி விளையாடிய ஜெய்ஸ்வால் பலரையும் கவர்ந்துள்ளார். பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் போன்ற எனெர்ஜியான இளம் வீரர்களை எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இணைத்தால் சிறப்பாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இதற்கு கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஆட்சேபணை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் “ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடும் ஜெய்ஸ்வாலை ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் சேர்ப்பது அவசரமான முடிவு. அடுத்த வருடம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டியில் அவரை விளையாட வைப்பதே சரியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K