திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (16:48 IST)

விசில் போடு.. சிஎஸ்கே மேட்ச் டிக்கெட் விற்பனை தேதி! – தயாராகும் ரசிகர்கள்!

CSK fans
ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்து சென்னையில் நடக்க உள்ள சிஎஸ்கே அணி போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

16வது ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றது. ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் சிஎஸ்கே போட்டிகள் தனி கவனம் பெற்று விடுகின்றன. முன்னதாக லக்னோ, ராஜஸ்தான் அணிகளுடன் சென்னை அணி மோதிய போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த நிலையில் டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்று தீர்ந்தன.

ஐபிஎல் லீக் போட்டிகளின் 29வது போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் இடையே நடக்கும் போட்டி ஏப்ரல் 21ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ஏப்ரல் 18ம் தேதி விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் விவரங்கள்:

C/D/E Lower – 1,500
I/J/K Upper – 2,000
I/J/K Lower – 2,500
C/D/E Upper – 3,000
KMK Terrace – 5,000

Edit by Prasanth.K