செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2020 (15:15 IST)

காயம்பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து – சிஎஸ்கே போட்ட ட்வீட்

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சிஎஸ்கே அணி ட்விட்டரில் இட்டுள்ள பதிவு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே உள்ளிட்ட 8 அணிகள் இடையே முதற் சுற்று போட்டிகள் முடிந்துள்ளன. இதில் கடந்த 2 போட்டிகளாக தொடர் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரவரிசை பட்டியலில் கடைசி இடத்தை அடைந்துள்ளது.

உலக கோப்பை தொடருக்கு பிற்கு நீண்ட நாட்கள் கழித்து வந்த தோனியை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மீதமுள்ள ஆட்டங்களில் சிஎஸ்கே தனது வெற்றியை நிரூபித்தால்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு சிஎஸ்கே தனது ட்விட்டரில் பதிவொன்றை இட்டுள்ளது. அதில் “மற்றொரு இலக்கை எட்டவோ புதிய கனவுகளை காணவோ இன்னும் அவகாசம் இருக்கிறது” என தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த சுற்றில் சிஎஸ்கே வீறுகொண்டு செயல்பட்டு தரவரிசையில் தனக்கான இடத்தை எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.